தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை வாகன ஓட்டுநர் சித்திரை செல்வம் தாக்கப்பட்டதை கண்டித்து, சக பணியாளர்கள் வடபாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மண் அகற்ற அனுமதி தேவை என்று கூறியதால் நவீன் என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. பணியாளர்கள் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் நவீன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.