தூத்துக்குடி மேலூர் பங்களா தெருவில் நேற்று நள்ளிரவில் சேதமடைந்த மின்கம்பம் கட்டிடம் மீது சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, நள்ளிரவு என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக கம்புகளை முட்டுக்கொடுத்துள்ளனர். மின்வாரியம் உடனடியாக சேதமடைந்த கம்பத்தை மாற்றி புதிய கம்பத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊழியர் பற்றாக்குறையால் மின் கம்பங்கள் முறையாக பராமரிக்கப்படாததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.