தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பாஜகவினரை மிரட்டும் வகையில் பேசியதாக மேயர் ஜெகன் பெரியசாமி மீது பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மரபுகளை மீறிய பேச்சு என குற்றம் சாட்டிய பாஜக வழக்கறிஞர் பிரிவினர், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி மனு வழங்கியுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.