மிரட்டல் அரசியலுக்கு பாஜக ஒருபோதும் அஞ்சாது; பிஜேபி

398பார்த்தது
மிரட்டல் அரசியலுக்கு பாஜக ஒருபோதும் அஞ்சாது; பிஜேபி
தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியது அரசியல் மிரட்டலாகவும், அராஜகப் போக்காகவும் இருப்பதாக பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநகராட்சி ஊழல்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், வன்முறையை தூண்டும் வகையில் மேயர் பேசியதாக அவர் குற்றம்சாட்டினார். ஜனநாயகப் போராட்டத்தை பாஜக தொடர்ந்து முன்னெடுத்து, மாநகராட்சி முறைகேடுகளை ஆதாரங்களுடன் மக்களிடம் வெளிப்படுத்தும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி