சென்னை, இன்று (நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் திருவள்ளுார் போளிவாக்கத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், ஆணையர் பிரியங்கா ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.