தூத்துக்குடி: பேருந்து நிலையம் இடிந்து விபத்து: சீரமைக்க கோரிக்கை

77பார்த்தது
தூத்துக்குடி: பேருந்து நிலையம் இடிந்து விபத்து: சீரமைக்க கோரிக்கை
தூத்துக்குடியில் ஆபத்தான நிலையில் உள்ள புதிய பேருந்து நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, வேளாங்கன்னி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். 

தற்போது இக்கட்டிடம் சிதிலம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜூன் 4) இரவு மதுரை பேருந்துகள் நிற்கும் பகுதியில் மேற்கூரை உடைந்து விழுந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி