தூத்துக்குடி வடபாகம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபஸ்டின் (25) மற்றும் ஜெய் ஆனந்த் (21) ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.