தூத்துக்குடியில் கடந்த 29ஆம் தேதி துவங்கி இன்று இரண்டாம் தேதி வரை நடைபெறும் 15வது அகில இந்திய பல்கலைக்கழக கல்லூரி அணிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில், நேற்று நடைபெற்ற ஆண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெயின் யுனிவர்சிட்டி பெங்களூரு அணி 53-50 என்ற புள்ளிக் கணக்கில் கிறிஸ்டியன் காலேஜ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில், சென்னை லயோலா கல்லூரி அணி 58-55 என்ற புள்ளிக் கணக்கில் அல்போன்சா காலேஜ் கேரளா அணியை வென்றது. இன்று இரவு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.