புதிய திரைப்படங்கள் வெளியாகி ஒரு வாரத்திற்கு 5 காட்சிகள் திரையிடலாம் என்றும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள், உள்ளூர் பண்டிகை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிடலாம் என்றும் முதல்வர்
விஜய் அனுமதி அளித்துள்ளார். இந்த உத்தரவை தூத்துக்குடி திரையரங்கு உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், திரையரங்குகளுக்கு அரசு கூடுதல் சலுகைகள் வழங்கி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.