தூத்துக்குடி- தலைவர் படம் எப்பொழுதுமே கலக்கலாக இருக்கும் வந்தால் வேட்டை தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்படும் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் மக்கள் சேவை செய்ய யார் வந்தாலும் ஆதரவு உண்டு என திரைப்பட நடிகர் ஜான்
விஜய் பேட்டி
தூத்துக்குடியில் நடிகர் ஜான்
விஜய் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசும்போது: எனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனது உறவினர்களை பார்க்க எனது அம்மாவுடன் செல்கிறேன் என்று கூறிய அவர் நடிகர்
ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள வேட்டையன் படம் குறித்து கூறுகையில் தலைவர் படம் எப்பொழுதுமே கலக்கலாக இருக்கும் வந்தால் வேட்டை தான் என்றார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்படும் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் மக்கள் சேவை செய்ய யார் வந்தாலும் ஆதரவு உண்டு. வாழை சிறப்பான படம்
மாரி செல்வராஜ் நன்றாக பண்ணியுள்ளார் படத்தில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர் இதே போன்ற படங்கள் வர வேண்டும் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
தற்போது தான் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருவதாக கூறினார். பாலியல் சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டு அவர் சென்றார்.