தூத்துக்குடியில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து அவதூறாக பேசியதாக
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது புகைப்படத்தை செருப்பால் அடித்து கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அமுதா நகர் காமராஜ் என்பவரின் வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை மர்ம நபர்கள் சேதப்படுத்தி, மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.