தூத்துக்குடி: தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி பேரணி

612பார்த்தது
தூத்துக்குடி: தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி பேரணி
வாக்குச் சாவடியில் ஈடுபட்ட இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக கோரியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்தபடி, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த பேரணி, ஒன்றாம் கேட் காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது. இதில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திற்கும், மோடி அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி