தூத்துக்குடியைச் சேர்ந்த சேதுராமலிங்கம் என்பவர், எலக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பழைய பைக்கை கொடுத்து புதிய பைக் வாங்க முயன்றார். பைனான்ஸ் ஏற்பாடு செய்வதாகக் கூறிய நிறுவனம், பின்னர் அதைச் செய்யாமல் பழைய பைக்கையும் திருப்பித் தர மறுத்து, விற்றுவிட்டதாகத் தெரிவித்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சேதுராமலிங்கம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையம், பழைய பைக்கை விற்ற ₹28,000, மன உளைச்சலுக்கு ₹25,000, வழக்கு செலவுக்கு ₹10,000 என மொத்தம் ₹63,000 தொகையை 6 வாரங்களுக்குள் வழங்க உத்தரவிட்டது. தாமதம் ஏற்பட்டால் 9% வட்டி வசூலித்து வழங்கவும் ஆணையம் அறிவித்துள்ளது.