தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மெயின் ரோட்டில் பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படாததால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழிவுநீர் தேக்கம், துர்நாற்றம், சுகாதார சீர்கேடு மற்றும் பள்ளி நேரங்களில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாநகராட்சி மேயர் நேரடியாக ஆய்வு செய்து உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.