பிரதான சாலையில் ஆபத்தான பள்ளங்கள்: ஆணையரிடம் பாஜக புகார்!

0பார்த்தது
பிரதான சாலையில் ஆபத்தான பள்ளங்கள்: ஆணையரிடம் பாஜக புகார்!
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பிரதான சாலையில் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பல மாதங்களாக மூடப்படாமல் இருப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாஜக சார்பில் ஓபிசி மாவட்ட பொதுச் செயலாளர் வன்னி ராஜ் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவிடம் மனு அளித்தார். பாஜக வடக்கு மண்டல தலைவர் சுதா, தினமும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் இந்தச் சாலையில் இரவு நேரங்களில் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மக்களின் பாதுகாப்பில் மாநகராட்சி அலட்சியம் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி