மீன்களின் வரத்து குறைவு; மீன்களின் விலை குறைந்து

1பார்த்தது
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் கார்த்திகை மாதம் துவங்கியதை முன்னிட்டு மீன்களின் வரத்து குறைந்துள்ளது. கடல் காற்று காரணமாக குறைவான படகுகளே மீன்பிடிக்கச் சென்றன. மேலும், சபரிமலை விரதம் மற்றும் கார்த்திகை மாதத்தில் அசைவம் தவிர்ப்பதால் மீன் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், சீலா மீன் கிலோ ₹1000, விளை, ஊழி, பாறை மீன்கள் கிலோ ₹250-₹300, கேரை மீன் கிலோ ₹170, ஐலேஷ் மீன் கிலோ ₹190, சூப்பர் நண்டு கிலோ ₹700, பொட்டுநண்டு கிலோ ₹400 என மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. விலை குறைந்ததால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி