தூத்துக்குடியில், SIR எனப்படும் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையைக் கண்டித்து திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி கலந்து கொண்டு உரையாற்றினார். தேர்தல் நெருங்கும் நிலையில் SIR சட்ட செயல்பாட்டை அவசரப்படுத்துவது ஒன்றிய அரசின் நோக்கத்தைக் காட்டுவதாகவும், இந்த சட்டம் மக்களிடம் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்க்கின்றன என்றும் கனிமொழி தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், மாநகர திமுக செயலாளர், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். "SIR திருத்தத்தைக் கண்டிக்கிறோம்" என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.