மத்திய பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நாளை (12-ம் தேதி) 24 இடங்களில் மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சர் மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்காதது, கல்வி, ஜல் ஜீவன் மிஷன், 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட நிதிகளை வழங்காதது, சென்னை மெட்ரோ விரிவாக்கம் மற்றும் மதுரை எய்ம்ஸ் போன்ற திட்டங்களுக்கு நிதி தாமதம் செய்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் அனைவரும் இதில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.