சட்டமன்றத்தில் இன்று சமூக நலத்துறை சார்பில் மானிய கோரிக்கையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தாக்கல் செய்கிறார். இதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 38 வது வார்டு வட்டச் செயலாளர் கங்கா ராஜேஷ் தலைமையில் திமுகவினர் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் ஏராளமான திமுக நிர்வாகிகள் அமைச்சர் கீதா ஜீவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.