சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது

தூத்துக்குடியில் 65 வயது பிரபாகர் மீது 8 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்தது. மாணவியின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபாகரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.