தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் முதியவருக்கு கத்திக்குத்து

931பார்த்தது
தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் முதியவருக்கு கத்திக்குத்து
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை பணம் கேட்டு மிரட்டி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டப்பிடாரம் அருகே கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் (65) என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி