தூத்துக்குடியில் உள்ள பிரபல கடைகளில் விற்பனை செய்யப்பட்ட போலி கொசு விரட்டி திரவ பாட்டில்களை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனையில் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில், ‘வேலவன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘குரு டிரேடர்ஸ்’ கடைகளில் இருந்து ‘ஆல் அவுட்’ போலியாக தயாரிக்கப்பட்ட 1,014 பாட்டில்கள் (மதிப்பு ₹86,190) கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.