தூத்துக்குடி ராஜகோபால் நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் மலையரசன் மகன் இசைக்கியப்பன் (60). விவசாயம் செய்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.