தூத்துக்
குடி பூபால்ராயபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் தாமஸ் மகன் கிரிஃபின் (26). இவர் நேற்று (டிசம்பர் 27) மதியம் 3மணியளவில் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் சக மீனவர்கள் 5பேருடன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றார். நள்ளிரவு 1 மணி அளவில் 15 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென கால் தவறி கடலுக்குள் விழுந்தார். அவரை சக மீனவர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை மீட்டு திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மறைன் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்துமாரி சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.