தூத்துக்குடியில் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் திரேஸ்புரம் மீன்பிடி இறங்குதளம், மீன்பிடி துறைமுகம், பாத்திமாநகர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் இந்த முகாம்களைத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, தமிழ்நாடு மீனவர் நல வாரியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.