கொலை வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை

9பார்த்தது
கொலை வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலையன்கரிசல் பகுதியில் 2015ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், பொன்சேகர், சுபாகர், ரமேஷ், சுரேஷ் மற்றும் மாடசாமி ஆகிய 5 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 15,000 அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் முருகவேல், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ் மற்றும் காவலர் விஜயா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டில் மட்டும் 23 கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி