நாளை பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தூத்துக்குடி பூச்சந்தைக்கு ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல வண்ண ரோஜாப் பூக்கள் குவிந்துள்ளன. வழக்கமாக 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ரோஜாப் பூ கட்டு தற்போது 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு ரோஜாப் பூ 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மலர்களால் ஆன பொக்கேக்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொக்கேக்கள் 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.