2வது நாளாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

533பார்த்தது
2வது நாளாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று 2வது நாளாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கடந்த 10ஆம் தேதி கடலுக்குச் சென்றபோது விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், இனிகோ நகர் நாட்டுப்படகு மீனவர்கள் விசைப்படகில் நுழைந்து திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கனிஷ்டன் சிலுவையார் என்பவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி