விஜய் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கருத்து

2பார்த்தது
தூத்துக்குடி டூவிபுரத்தில் அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி அலுவலகத்தை மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி. த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்து கட்சி கொடியேற்றினார். வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் அதிமுக போட்டியிடும் என்றும், எடப்பாடி கே. பழனிசாமி ஆதரவுடன் தேர்தலை சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார். நடிகர் விஜய் குறித்து விமர்சனம் செய்த அவர், அவர் நடிகராகவே மக்கள் பார்க்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி