தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சப் கலெக்டர், நகராட்சி ஆணையர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் ஒன் தேர்வு துவங்கியது. மாவட்டம் முழுவதும் 22 மையங்களில் 5952 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சப் கலெக்டர், நகராட்சி ஆணையர், டிஎஸ்பி, வணிகவரித்துறை இணை ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு இன்று (ஜூன் 15) மாவட்டத்தில் 22 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வை 5952 தேர்வர்கள் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் தேர்வர்கள் கடும் சோதனைக்குப் பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் தேர்வு மையங்களில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்வை கண்காணிக்க நான்கு மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.