தூத்துக்குடி: 226 பேர் தேர்வு எழுதிய நிலையில் குரூப்–2 ரத்து

710பார்த்தது
சென்னையில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடி காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் தமிழகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டன. தூத்துக்குடி பள்ளி தேர்வு மையத்தில் 226 தேர்வர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், நீண்ட தூரம் பயணம் செய்து வந்த தேர்வர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இது போன்ற தேர்வுகள் மீண்டும் மீண்டும் ரத்து செய்யப்படுவது மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி