தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திலீபன், பெண் காவலருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில், நெல்லை சரக டிஐஜி தேஷ்முக் சேகர் சஞ்சய், ஆய்வாளர் திலீபனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை பெண் காவலரின் புகாரை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இது காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.