மாநகராட்சியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ. 98 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வண்ண விளக்குகள் சில மாதங்களிலேயே செயலிழந்ததாக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார். மார்ச் 2024-ல் தேசியக்கொடி வண்ண விளக்குகள் மற்றும் சாதாரண விளக்குகள் பொருத்தப்பட்டதாகவும், அவை விரைவில் பழுதடைந்தது மக்கள் பணம் வீணானதற்குச் சான்று எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒப்பந்த நகல், தரப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை வெளியிட வேண்டும் என்றும், பொறுப்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சட்டப்பூர்வ போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.