நீர், நிலம், காற்று, பூமியை பாதுகாப்பது அவசியம்; அமைச்சர்

364பார்த்தது
நீர், நிலம், காற்று, பூமியை பாதுகாப்பது அவசியம்; அமைச்சர்
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், இயற்கையின் கொடையான நீர், நிலம், காற்று, பூமியை பாதுகாப்பது எதிர்கால சந்ததியினரான மாணவர்களின் கடமை என்று தெரிவித்தார். வன உயிரின பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பயிற்சியில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கினார். பிளாஸ்டிக் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இயற்கையை பாதுகாப்பது குறித்த கருத்துக்களை அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி