தூத்துக்குடியில் உள்ள பாரம்பரிய ஜாமியா பள்ளிவாசல், ஜமாத்தார்களின் முடிவும் இஸ்லாமியர்களின் நன்கொடையும் மூலம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு புதன்கிழமை மாலை சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. தலைமை இமாம் அப்துல் அழிம் தலைமையில் நடைபெற்ற விழாவில் பல மத முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு துவா ஓதி, புதுப்பிக்கப்பட்ட மிம்பர் மற்றும் மிஹ்ராப் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தொழுகை மற்றும் உரைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமான ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.