தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா உறுதி செய்தார். தண்டனை விவரம் இன்று பிற்பகல் 12:30 மணிக்கு மேல் அறிவிக்கப்படும்.