தூத்துக்குடியில் மாநகராட்சி சார்பில் செயற்கை புல் தரை விளையாட்டு மைதானம் கனிமொழி கருணாநிதி, எம்பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் திறந்து வைத்தார். இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கு அதிநவீன வகையில் செயற்கை புல்வெளி மைதானம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வ.உ.சி. கல்லூரி அருகே செயற்கை புல் தரை மைதானம் திறப்பு விழா தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செயற்கை புல் தரை விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து விளையாட்டு வீரர்களிடம் கலந்துரையாடி வாலிபால், இறகு பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி சாதனங்களை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பார்வையிட்டனர்.