நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடியில் இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. கிளியோபட்ரா திரையரங்கில் காலை காட்சி தொடங்கியதை முன்னிட்டு, தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மத்திய மாவட்ட செயலாளர் எஸ். டி. ஆர். சாமுவேல்ராஜ், இணைச் செயலாளர் கோல்டன் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.