கோவில்பட்டி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு சிறை

1380பார்த்தது
கோவில்பட்டி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு சிறை
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2021ஆம் ஆண்டு 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரனுக்கு (27) தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 25 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி