மீன் வரத்து குறைவு: வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மீனவர்கள்

294பார்த்தது
மீன் வரத்து குறைவு: வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மீனவர்கள்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாளொன்றுக்கு சுமார் ரூ. 20 கோடி மதிப்பில் மீன் ஏலம் நடைபெற்று வந்தது. 5,000 தொழிலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பி வாழ்ந்து வந்தனர். தற்போது மீன்வரத்து குறைந்ததால், தினமும் 30-50 படகுகள் மட்டுமே கடலுக்குச் செல்கின்றன. ஒரு படகுக்கு ரூ. 2 லட்சம் வரை செலவாகும் நிலையில், வருமானம் போதாமல் நஷ்டம் அதிகரித்துள்ளது. இதனால் 7,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மானிய விலையில் டீசல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.