தூத்துக்குடி: நுண் உர செயலாக்க மையங்களில் மேயர் ஆய்வு

74பார்த்தது
தூத்துக்குடி: நுண் உர செயலாக்க மையங்களில் மேயர் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி மண்டலங்களில் உள்ள நுண் உர செயலாக்க மையங்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் உள்ள நுண் உர செயலாக்க மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அப்போது அங்கு பணியில் இருந்த அலுவலர்களும் பணியாளர்களும் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றை வரும் நாட்களில் நிறைவேற்றித் தருகிறேன் என்று கூறியுள்ளேன்" என்றார். மாமன்ற உறுப்பினர் முத்துவேல் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி