தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மேயர் ஆய்வு

64பார்த்தது
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மேயர் ஆய்வு
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பழுதடைந்து சில பகுதிகளில் மேற்கூரை இடிந்துள்ளது. பயணிகள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனவே பேருந்து நிலையத்தை உடனடியாக ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் அந்தோணி மார்ஷலின் உட்பட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி