தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். ஒன்றாம் கேட் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட மின் விளக்கை மாற்றி அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று, அந்தப் பகுதியையும், மட்டக்கடை எஸ். எஸ். பிள்ளை மார்க்கெட் சாலையில் நடைபெற்று வரும் புதிய வடிகால் மற்றும் காந்தி சிலை அருகில் உள்ள ஓய்விடப் பூங்கா பணிகளையும் அவர் பார்வையிட்டார். ஆய்வின்போது மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார் உடனிருந்தார்.