தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திரு உருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த் சேகரன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் முத்துராமலிங்க தேவரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், பனிக்குழு தலைவர் கீதா முருகேசன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன் திமுக வட்ட செயலாளர்கள் கதிரேசன் வழக்கறிஞர் சதீஷ்குமார், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மின்சார வாரிய தொழிற்சங்க செயலாளர் பேச்சிமுத்து, கோட்டு ராஜா, மாநகர திமுக தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.