தூத்துக்குடி மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து சக்தி விநாயகர் இந்து வித்யாலயா சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துரையாடினார். பள்ளித் தாளாளர் கு. விவேகானந்தன், செயலாளர் விவேகம் கு. ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி நிர்வாகி முத்துக்குமார், ஆசிரியர் திருமலைச்செல்வி ஆகியோர் மாநகராட்சி செயல்பாடுகளை குறித்து விரிவுரையாற்றினர். மேயர் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி நன்றி கூறினார். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.