தூத்துக்குடி மாநகர திமுக இளைஞரணி சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, 'உதயநிதி கோப்பை' காண மாபெரும் கிரிக்கெட் போட்டி தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 111 அணிகள் கலந்து கொண்டன. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் போட்டியைத் தொடங்கி வைத்தார். நவம்பர் 27ஆம் தேதி வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்படும்.