தூத்துக்குடி ரயில்வே நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த 35 பவுன் தங்க நகைகளை தூய்மைப் பணியாளர் மீனாட்சி கண்டெடுத்து நேர்மையாக ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். சுமார் 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த நகைகள், அதன் உரிமையாளர் ராமலட்சுமியிடம் பத்திரமாக மீட்கப்பட்டன. இந்த நேர்மையான செயலைப் பாராட்டி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீனாட்சியை சால்வை அணிவித்து ரொக்கப் பரிசும் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.