தூத்துக்குடி: திராவிட மாடல் ஆட்சியில் வளர்ச்சி; அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு

665பார்த்தது
தூத்துக்குடியில் நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” பொதுக்கூட்டத்தில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், திராவிட மாடல் ஆட்சியில் சாலை மேம்பாடு, மழைநீர் வடிகால், மின்மாற்றிகள் அமைப்பு மற்றும் மீன்பிடி துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கொரோனா மற்றும் நிதி நெருக்கடி காலத்திலும் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மருத்துவ வசதிகளை மேம்படுத்தி மக்களை பாதுகாத்ததாக கூறினார்.