வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடியில் அய்யர்விளை குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததை அடுத்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டார். பம்ப் ரூம் பகுதியில் அடைப்புகளை நீக்கி சீர் செய்யும் பணிகளை துரிதப்படுத்தினார். மேலும், ராஜீவ் நகர் மற்றும் P&T காலனி பகுதிகளையும் பார்வையிட்டு, தீயணைப்பு வாகனங்கள் மூலம் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். அப்பகுதி மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.