தூத்துக்குடி 39வது வார்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பணிகள் நடைபெறவில்லை என்றும், திமுக ஆட்சி அமைந்தபின் மக்களுக்கான உரிமைகளை முதலமைச்சர் ஸ்டாலின் போராடி பெற்றுத்தருகிறார் என்றும் அவர் கூறினார். எந்த மழை வந்தாலும் பொதுமக்களை பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மக்கள் பணி செய்வதே தங்கள் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.